india

img

நுபுர் சர்மாவின் வார்த்தையால் நாடு எரிகிறது! - உச்சநீதிமன்றம்  

நுபுர் சர்மாவின் தேவையில்லாத பேச்சால் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர்.

இது அரபு நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து பாஜகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து இருவரையும் நீக்கி அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. 

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

இந்நிலையில், நாடு முழுவதும் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தலைநகர் டெல்லிக்கு மாற்றக்கோரி, நுபுர் சர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு காரணமே நுபுர் சர்மாவின் பேச்சுதான். தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் பார்த்தோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று வேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

மேலும், மனுவில் நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார். உண்மையில் நாட்டு மக்களால் நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது நுபுர் சர்மாவால் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலா? என்று கேள்வி எழுப்பினார். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்த பெண் ஒரு தனி நபராக காணமாகியுள்ளார் என்று கூறியுள்ளார்.

;