“எனக்கு கிடைக்க இருந்த பதக்கம், என்னு டைய தனிப்பட்ட வெற்றியாக பாஜக கருதி யது. அதாவது எனக்கு பதக்கம் கிடைப்பதை பாஜக ஈகோ பிரச்சனையாக எடுத்துக்கொண்டது. அத னால் இந்திய ஒலிம்பிக் சங்கத்திலிருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜல்னா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள வினேஷ் போகத் கூறினார்.
கொல்கத்தா மருத்துவ மாணவி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், “நான், இறந்த மருத்துவ மாணவி யின் பெற்றோருக்கு ஒருபோதும் பணம் வழங்க வில்லை” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் போலி டாக்டர் ஒருவர் யுடியூப் (YOUTUBE) பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடை யில்லை” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் இருந்து நரசிபட்டினம் நோக்கிச் சென்ற பேருந்து போரண்ண குடேம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.