இங்கிலாந்து தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் - ஐடியா (இந்திய பிரிவு) நிறு வனத்தில் ஒன்றிய அரசாங்கம் வைத்துள்ள 33 சதவீத பங்கை உல கின் முதன்மையான பணக்காரரான எலான் மஸ்க்கின் தொலைத்தொடர்பு (வை-பை) ஸ்டார் லிங்க் நிறுவனத் துக்கு விற்கப்போவ தாக தகவல் வெளி யானது. இதற்கு வோடபோன் - ஐடியா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து வோடபோன் - ஐடியா விளக்கம் அளித்துள்ளது. அதில்,”ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் பங்கு விற்பனை தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் எதன் அடிப்படையில் இப்படி ஒரு செய்தி பரவியது எனத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
பங்குகள் உயர்வு
பங்கு விற்பனை பற்றிய செய்தி வெளியான பொழுது வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் வோடபோன் - ஐடியா பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் வேறு எந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஒருவேளை அம்பானியின் ஜியோ நிறுவனம் ஸ்டார்லிங்க் உடன் பங்குவிற்பனை தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என மறை முக தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.