india

img

பெகாசஸ் விவகாரம்: உண்மையை வெகு காலத்துக்கு மறைக்க முடியாது - சீதாராம் யெச்சூரி

இந்திய உளவுத்துறை பெகாசஸ் உளவு மென்பொருளுடன் இணைக்கக்கூடிய கருவி ஒன்றை வாங்கியதை OCCRP (Organized Crime and Corruption Reporting Project) எனும் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் என்பது இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் என்.எஸ்.ஓ அமைப்பின் தயாரிப்பாகும். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா - இஸ்ரேல் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை ஆகியவை இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.  பா.ஜ.க அரசு அந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியப் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களை உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்திய உளவுத்துறை பெகாசஸ் உளவு மென்பொருளுடன் இணைக்கக்கூடிய கருவி ஒன்றை வாங்கியதை OCCRP (Organized Crime and Corruption Reporting Project) எனும் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து, ”பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் அலைபேசிகள் ஊடுருவப்பட்டன. இப்பொழுதாவது மோடி அரசு உண்மையை சொல்ல வேண்டும். உண்மையை வெகு காலத்துக்கு மறைக்க முடியாது” என்று சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

;