india

img

‘மசூதிகளை இடித்து தள்ளுங்கள்: இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள்!’

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் நாட்டில்  இந்து - முஸ்லிம் வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முனைப்பில் பாஜக மற்  றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்  துத்துவா அமைப்புகள்  தீவிரமாகி  வெறுப்பு பிரச்சாரத்தை கையிலெ டுத்துள்ளன.

இந்நிலையில், மதவெறி வெறுப்புப் பேச்சுகளுக்குப் பெயர்  பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலை வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஞாயிறன்று பெல்காவியில் (கர்  நாடக மாநிலம்) நடைபெற்ற இந்  துத்துவா சார்பு கூட்டத்தில், “இந்து கோவில்களை இடித்து தான் மசூதிகள் கட்டப்பட்டுள் ளன.

இதனால் முஸ்லிம்கள் தாங்  களாகவே மசூதிகளை இடித்து  தள்ளுங்கள். அதுதான் உங்க ளுக்கு நல்லது. இல்லையென் றால் கடுமையான பின்விளைவு களை சந்திக்க நேரிடும். எத்தனை பேர் கொல்லப்படுவார்கள், என்  னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பது எங்களுக்கே தெரியாது” என இந்து - முஸ்லிம் மக்களி டையே வன்முறை தூண்டும் முனைப்பில் வெறுப்பை கக்கி யுள்ளார். கே.எஸ்.ஈஸ்வரப்பா இவ்வாறு பேசுவது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம்,”நாட்டில் கோவில் இருந்த இடங்களில் கட்டப்பட்டுள்ள  ஒரு மசூதியை கூட தரைமட்டமாக்  காமல் விட மாட்டோம்” என மிரட்  டல் விடுத்தார்.  

தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு மிக்க பேச்சை பேசி வருவதால் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கைது  செய்து சிறையில் அடைக்க  வேண்டும் என சமூகவலைத் தளங்களில் கோரிக்கை வலுத்து வருகின்றன.