india

img

குதுப் மினார் பெயரை விஷ்ணு ஸ்தம்ப் என மாற்றக் கோரி சங்பரிவாரத்தினர் போராட்டம்

குதுப் மினார் பெயரை விஷ்ணு ஸ்தம்ப் என மாற்றக் கோரி சங்பரிவாரத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குதுப் மினார் வளாகத்திற்கு வெளியே அனுமன் சாலிசா பாடிய சங்பரிவாரத்தினர் அதன் பெயரை விஷ்ணு ஸ்தம்ப் என்று மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய இந்து முன்னணியின் சர்வதேச செயல் தலைவர் பகவான் கோயல் கூறுகையில், இது மாமன்னர் விக்கிரமாதித்தனால் கட்டப்பட்டது. ஆனால், குத்புதின் ஐபக் கட்டியதாக சொல்லிக்கொண்டார். ஆரம்பத்தில் இந்த வளாகத்தில் 27 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் குத்புதின் ஐபக்கால் அழிக்கப்பட்டன. குதுப் மினார் வளாகத்தில் கோவில்கள் இருந்ததற்கு சான்று, அங்கு மக்களால் கண்டுபிடிக்கப்படும் இந்து கடவுள்களின் சிலைகளே. எனவே, குதுப் மினாரை விஷ்ணு ஸ்தம்ப் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், குதுப் மினார் வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய கோயல், அவற்றை ஒரே இடத்தில் வைத்து வழிபடும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;