india

img

காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த அரசாணை அரசிதழில் வெளியீடு

புதுதில்லி,ஆக.7- ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்த மத்திய பாஜக அரசு, அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய பாஜக அரசு தனக்கு உள்ள மிருக பலத்துடன் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றியது.   இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின்  ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர்   ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதாவின்படி, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.

;