india

img

500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 14.6% அதிகரிப்பு!

2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 14.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில், நாட்டில் புழங்கும் கள்ளநோட்டுகள் குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, கடந்த நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 79,669 கண்டுபிடிக்கப்பட்டது. 2022-23ஆம் நிதியாண்டில் 91,110 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 14.6 சதவிகிதம் அதிகமாகும்.
அதேபோல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள் கடந்த நிதியாண்டை காட்டிலும் 8.4 சதவிகிதம் அதிகமான கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், 2022-23 நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் 9,806 நோட்டுகளும், 10 ரூபாய் கள்ளநோட்டுகள் 313 நோட்டுகளும், 50 ரூபாய் கள்ளநோட்டுகள் 17,755 நோட்டுகளும், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 78,699 நோட்டுகளும், 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 27,258 நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2023இல் 2,25,769 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

;