india

img

தாமரை அல்ல... புல்டோசர்! ஜான் பிரிட்டாஸ் எம்.பி., ஆவேசம்

பதினெட்டாவது மக்களவை யின் முதல் கூட்டத் தொடர்  நடைபெற்று வரும் நிலையில்  மாநிலங்களவையில் திங்களன்று  குடியரசுத் தலைவர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதா வது:

“மாண்புமிகு பிரதமரும் இதர  அமைச்சர்களும் அரசமைப்புச்சட் டத்தின்கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை முதலில் மேற் கோள் காட்டுவதிலிருந்து என் உரை யைத் தொடங்குகிறேன். அவர்கள்  எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி யின் வாசகம் வருமாறு: “நான் நாட்  டின் அரசமைப்புச்சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் அச்  சமோ, தயவோ இன்றி, பாசமோ அல்லது கெட்ட எண்ணமோ எதுவு மின்றி, நல்லது செய்வேன். (‘I will  do right to all manner of people  in accordance with the Constitution and the law with out fear or favour, affection or  ill-will.’) நம் பிரதமர் இதனை முத லமைச்சராகவும், பின்னர் பிரதம ராகவும் இதுவரை குறைந்தது ஆறு  முறை எடுத்திருக்க வேண்டும். இவ்  வாறு இவர் எடுத்த உறுதிமொழி யை இவர் மீறிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை இல்லையா?

பாஜக உறுப்பினர்களை நான்  கேட்டுக்கொள்ள விரும்புவதெல் லாம் “நீங்கள் உங்கள் தாமரைச் சின்னத்தை, புல்டோசர் சின்னமாக மாற்றிக்கொள்ளுங்கள்.” இப் போது நீங்கள் புல்டோசரைத்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கி றீர்கள். சமீபத்தில் மொராதாபாத் தில் ஐந்து வீடுகள் புல்டோசர் கொண்டு  இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டி ருக்கிறது. இப்போது, புல்டோசர் உங்கள் சின்னமாக மாறிவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னதான் உறுதிமொழிகளை நீங்  கள் அளித்திருந்தபோதிலும், கட வுள்கள் உங்களைக் கைவிட்டு விட்டன. பைசாபாத்தில் அனைத் துக் கடவுள்களும் உங்களைக் கைவிட்டுவிட்டன. அயோத்தியில் ராமர் சிலைக்கு உயிரூட்டுதல் (praan  pratishttha) என்னும் நிகழ்வை  நடத்தினீர்கள். சென்ற கூட்டத்தொட ரின்போதே நான் பிரதமரின் கடமை  என்பது மக்களுக்கு உயிர் கொடுக்க  வேண்டும், வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று பேசினேன். அவர் மணிப்பூ ருக்குச் சென்றிருக்க வேண்டும்.  அங்குள்ள மக்களுக்கு வாழ்வை யும் வாழ்வாதாரங்களையும் கொடுத்திருக்க வேண்டும். வாழ் வையும், வாழ்வாதாரங்களையும் கடவுளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக மக்களுக்குக் கொடுத்தி ருக்க வேண்டும்.

பிரதமர் தியானம் செய்திடும்  நிகழ்வுகள் ஏராளம். அதேசமயத்  தில் அவர் ட்விட்டரிலும் செய்தி களை அளித்துக்கொண்டிருக்கி றார். நீங்கள் கூட்டாட்சித் தத்து வத்தின் அடிப்படைகளையே அழித்  துக் கொண்டிருக்கிறீர்கள். (ஜான்  பிரிட்டாஸ் ஆர்எஸ்எஸ் குறித்து  கூறிய வாசகங்கள் அவைக்குறிப்பி லிருந்து நீக்கம்.) ஆர்எஸ்எஸ் என் னும் சொல் நாடாளுமன்றத்தில் கூறப் படக்கூடாத சொல் அல்ல. (RSS is not unparliamentary.)

அகில இந்திய அளவில் நுழை வுத் தேர்வுகள் நடத்துவதன் மூலம்  கோடிக்கணக்கான மாணவர்களின் கனவுகள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நடத்திடும் பொறுப்பை மாநிலங்க ளிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் ஜேஎன்யுவில் படித்தவன். ஜேஎன்யு கேள்வித்தாள்கள் கசி யாமல் ஐம்பது ஆண்டுகளாக ஜேஎன்யு தேர்வுகளை நடத்திக்  கொண்டிருக்கிறது. இப்போது நீங்  கள் சியுஇடி (CUET-Common University Entrance Test) என்னும்  முறையை அறிமுகப்படுத்தி இருக்  கிறீர்கள். இதனை நீங்கள் அறி முகப்படுத்தியிருப்பதற்கு ஒரே காரணம், தில்லிப் பல்கலைக் கழ கத்தில் தென்னிந்தியர்கள் ஏராளமா னவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்  பதேயாகும். (பின்னர் அவர் பேசி யவை அவைக்குறிப்பிலிருந்து நீக்  கப்பட்டிருக்கின்றன) (குறுக்கீடு)

என்னைப் பேசவிடுங்கள். தயவுசெய்து எனக்கு நேரம் கொடுங் கள்.

அவைத் தலைவர்: உங்கள் இடத்தில் அமருங்கள். நீங்கள்  உறுதிமொழி எடுத்துக்கொள்வதி லிருந்து ஆரம்பித்து, இப்போது  எங்கே நிற்கிறீர்கள் என்று பாருங் கள். நம்மைப் போன்ற ஒரு நாட்டில் நீங்கள் வேறுவிதமான குரலை எழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். …(குறுக்கீடு)

ஜான் பிரிட்டாஸ்: கல்வி என்பது உங்களைப் பொறுத்தவரை புதிய  கடந்தகாலத்தைக் கண்டுபிடிப்ப தாகும். ஏனென்றால் கடந்த  காலத்தைக் கட்டுப்படுத்துபவர் கள்தான் எதிர்காலத்தையும் கட்  டுப்படுத்த முடியும் என்று பாசிஸ்ட்டு கள் நம்புகிறார்கள். இந்திய வர லாற்றிலிருந்து பாபர் மசூதி அழிக்  கப்பட்டது. போட்டி, கூட்டுறவு கூட் டாட்சித்தத்துவம் (Competetive, cooperative federalism) என்ற  பெயரில் மாநிலங்களின் அனைத்து  அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள் ளன. மாநிலங்கள் போதிய நிதி யின்றி பட்டினியால் வாடுகின்றன. இதற்கு எதிராக நாங்கள் முறை யிட்டோம். கர்நாடகம், கேரளம்  உட்பட பல மாநில அரசுகள் தில்லி யில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டன.

நான் தேர்தல் பத்திரங்கள் குறித் துப் பேச விரும்பவில்லை. (குறுக்கீடு)

ஜான் பிரிட்டாஸ்: நீங்கள் என்  னைத் தடம்புரளச்செய்திட முயற் சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதிகாரத்தில் நீங்கள் பத்  தாண்டுகள் ஆட்சியில் இருந்தபின்  பும், நீங்கள் மொகலாயர்களையும், நேருவையும் ஒவ்வொன்றுக்கும் குறைகூறிக் கொண்டிருக்கிறீர்கள்.

திருமதி இந்திரா காந்தியை துர்கா என்று மாண்புமிகு அமைச்  சர் அடல் பிகாரி வாஜ்பாயி விளித்  தது உண்மை இல்லையா? இப் போது உங்கள் அமைச்சரவையில் உள்ள ஒருவரே திருமதி இந்திரா காந்தியை இந்தியாவின் தாய்  என்று அழைத்தது உண்மையில் லையா?

எனவே இந்திரா காந்தி யார் என்பதையும், அவசரநிலை என்ன என்பதையும் முதலில் நீங்கள் தீர்மா னித்திட வேண்டும். நாங்கள் அவசர நிலையை எதிர்த்தோம். கேரளா வில் காங்கிரசை எதிர்த்துக் கொண்  டிருக்கிறோம். இதில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இப்போது உங்களுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சி கள் மீது புதிய அன்பு உங்களுக்கு வந்திருக்கிறது. பாஜக-வின் வர லாற்றை ஆராய்ந்தோமானால் அது  தன் கூட்டணிக் கட்சிகளை சாப் பிட்டுவிடும் என்பதைப் பார்க்க முடியும். போலி இரவுக் காவலர் (psudo chowkidar) இங்கே தடித்த கிரிமினல்களை மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறார். (The psudo Chowkidar guarding only hardened criminals...)

இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி அடிக்கப்பட்டு அடுத்த உறுப்பினர் பேச அழைக் கப்பட்டார்.             (ந.நி.)

;