india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லியில் சுமார் 100 நாய்களுக்கு பாது காப்பினை உறுதி செய்யும் வகையில் வழங் கப்பட்ட, “க்யூ ஆர்” அடிப்படையிலான சிறப்பு ஆதார் கார்டுகள் வரவேற்பு பெற்றுள்ளன. இந்த “க்யூ ஆர்” ஆதார் கார்டு மூலம் நாய் குறித்தான விவரங்களுடன், அதற்கான உணவளிக்கும் விவரங்கள், அவசரகாலத் தொடர்புகள் உள்ளிட்ட வற்றையும் அறிந்துகொள்ள முடியும்.

பீகாரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட தயாரான  போது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய தால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

ஒரு தனிநபரின் நலன்களைப் பாதுகாக்க ஒரு மாநில அரசு எவ்வாறு உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும் என சந்தேஷ்காளி விவகாரத்தில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசிடம்  உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி யுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் மாவட்ட கனிம அறக்கட் டளை நிதியான ரூ.9.60 கோடியை மோசடி செய்த நபரை அம்மாநில காவல் துறையின் பொரு ளாதார குற்றப் பிரிவு போலீஸார் திங்களன்று கைது  செய்தனர்.

தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீ னுக்காக ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கைது நடவடிக்கையே சட்டவிரோதம் என்பதால் நேரடியாக அதை எதிர்த்து மனுத் தாக்கல்  செய்தோம் என்றும் கெஜ்ரிவால் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தொடர்பாக போலி வீடியோ பரப்பப்பட்ட விவ காரத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தில்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் மக்களை குறிவைத்து சர்ச்சைக் குரிய வகையில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்  போட்டியிட தடைவிதிக்க, தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிடக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்  கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. 

உளவுத்துறை எச்சரிக்கையால் நாடு முழு வதும் உள்ள அனைத்து அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பீன்யா  என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது  3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 

பிரபல கார் டாக்ஸியான ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமந்த் பக்க்ஷி  திடீர் ராஜினாமா செய்தார். ஓலா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக சேர்ந்த 3 மாதங்க ளிலேயே ஹேமந்த் பக்ஷி ராஜினாமா செய்துள்ள  நிலையில், மறுகட்டமைப்புக்காக 200 ஊழி யர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் ஓலா  நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுதில்லி
வாய்திறக்காத 
ஸ்மிருதி இரானி, 
தேசிய மகளிர் ஆணையம்

ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வன்முறைக்கு சர்வதேச அளவில்  சர்ச்சை பொருளாக மாறி வரும் நிலை யில், “இந்தியா” கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும்  கண்டனம் தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில், இந்த விவகாரம்  தொடர்பாக பிரதமர் மோடி, ஒன்றிய  மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் தேசிய மக ளிர் ஆணையம் சாதாரண கருத்துக்  கூட தெரிவிக்காமல் கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ம்ருதி இரானி தேர்தல் பிரச்சாரத்தில் பிஸி யாக உள்ள நிலையில், தேசிய மக ளிர் ஆணைய தலைவர் எங்கே இருக்  கின்றார் என்றே தெரியவில்லை.

அகமதாபாத்
மீண்டும் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
பாகிஸ்தான் பெயரைக் கூறி தப்பிக்க
முயலும் குஜராத் பாஜக அரசு

நாட்டில் போதைப் பொருட்கள் தயாரிப்பு, கடத்தல், விற்பனை  ஆகிய அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் மிக மோசமான அளவில் உள்ளது. இந்நிலை யில், கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் போதைப்பொருள் தயாரிப்புக் கூடத்தை  கண்டறிந்து அங்கு ரூ.300 கோடி மதிப்பி லான போதைப்பொருட்கள் கைப்பற் றப்பட்டது. அதைத் தொடர்ந்து,  ஏப்ரல் 28 அன்று குஜராத் கடற்பகுதி யில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86  கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டன.  இதன் தொடர்ச்சியாக, திங்களன்று குஜ ராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்  பொருள் கைப்பற்றப்பட்டு 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத் மாநிலம் போதைப் பொருள்  கூடாரமாக உள்ள நிலையில், அங்கு  கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்க ளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் விமர்சனம் எழக்கூடாது என்பதால், மாநிலத்தில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறி குஜராத் பாஜக  அரசு தப்பிக்க முயற்சித்து வருகிறது. 

புதுதில்லி
6 ஆம் கட்டத் தேர்தல்
57 தொகுதிகளுக்கு 
வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது

நாட்டில் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெற்று வருகிறது. இதுவரை  முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக் கும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், 95 தொகுதிகளுக்கான  மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7  அன்று நடைபெற உள்ள சூழலில் இதற்  கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

இந்நிலையில், மே 25 அன்று 57 தொகுதிகளில் நடைபெற உள்ள 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் திங்களன்று துவங்கியது.  இந்த 6ஆம் கட்டத் தேர்தலில் பீகார் (8  தொகுதிகள்), ஹரியானா (10), ஜார்க் கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), தில்லி (7) உள்  ளிட்ட மாநிலங்கள் மக்களவைத் தேர் தலை எதிர்கொள்கின்றன.

போபால்
மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் வேட்பாளரை விலைக்கு வாங்கிய பாஜக

18ஆவது மக்களவை தேர்தலில் “இந்தியா” கூட்டணிக் கட்சி ஆட்சி யை கைப்பற்றும் என “கோடி மீடியா” தவிர்த்து மற்ற பெரும்பாலான ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளி யிட்டு வருகின்றன. இதனால் பதறிப் போயுள்ள மோடி மற்றும் பாஜகவினர் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும், வெறுப்புப் பேச்சு  மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோக தோல்விப் பயத்தால் காங்கிரஸ் வேட்பாளர்களை விலைக்கு வாங்கியும் தேர்தல் ஜனநாயக முறையை பாஜக அழித்து வருகிறது. 

சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளரை விலைக்கு வாங்கிய பாஜக அங்கு போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதன்வரிசையில் மத்தி யப்பிரதேசத்திலும் காங்கிரஸ் வேட்பா ளரை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. 4ஆம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறி விக்கப்பட்ட அக்சய் பாம் வேட்புமனுவை  திரும்பப்பெற்று பாஜகவில் இணைந் துள்ளார். தோல்விக்கு பயந்து பாஜக  எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு  வாங்கும் சம்பவத்திற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்து வருகின் றன.

;