புதுதில்லி,நவ.21- ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறை கேடு வழக்கில் அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக்காவலில் உள்ளார்.
ப.சிதம்பரத்திடம் சில ஆவ ணங்களை காட்டி விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இரண்டு நாட்கள் அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது. அமலாக்கத்துறையின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், திகார் சிறையில் வைத்து ப.சிதம்பரத்திடம் அம லாக்கத்துறை விசாரணை நடத்த லாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.