india

‘3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற நான் கியாரண்டி’

புதுதில்லி, பிப். 5 - “இந்தியாவை 3-ஆவது பொருளா தாரமாக மாற்ற நான் கியாரண்டி” என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று உரை யாற்றினார்.

அப்போது இதனை அவர் தெரிவித்தார். “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்.. அதில் எந்த வொரு தவறும் இல்லை.. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல்.. ஒரு முகத்தை முன்னி லைப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்வதால்தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் முக்கியத்து வத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள். நாங்கள் (பாஜக அரசு) பேசுவது எங்கள் சோதனைகளை இல்லை..

 இந்த நாடு செய்த சாதனைகளைத் தான் நாங்கள் பேசுகிறோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனா வுக்குப் பிறகு மிகப்பெரிய பொருளா தாரமாக இந்தியா இருக்கும்.. இது தான் மோடியின் கியாரண்டி. எதிர்க் கட்சிகள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. மீண்டும் இதே வரிசையில் தான் இருப்பீர்கள்! வந்தே பாரத், மேக்  இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டடம் ஆகியவை இந்த நாட்டின் சாத னை.

இந்தியா மட்டுமின்றி உலக  நலனிற்காகவும் இந்தியா பாடுபடு கிறது. இதை ஜி20 மாநாடு, உலகம், உல கத் தலைவர்கள் புரிந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசு மிகப் பெரிய குறிக்கோள்களுடன் உழைத்து வரு கிறது. எனவே, நாட்டை பிளவுபடுத்து வதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறு த்திக் கொள்ள வேண்டும். மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தை எதிர்க் கட்சிகள் பிளவுபடுத்துகிறது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.