india

img

முஸ்லிம் மக்கள் தொகை குறித்த மோடியின் பொய்கள்

நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முடிவு உண்மைக்குப் புறம்பானது என்ப தற்கான ஆதாரங்கள் வெளியாகி யுள்ளன.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வின் தரவு களின் அடிப்படையில் வாஷிங்டன் டிசி (கொலம்பியா மாவட்டம்)-ஐ தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) வெளியிட்டிருந்த அறிக்கை, பிரத மர் மோடியின் பொய்களை அம்ப லப்படுத்துவதாக அமைந்துள்ளது.

1992-இல் நாட்டில் உள்ள முஸ்லிம் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் சராசரி எண் ணிக்கை 4.4 ஆக இருந்தது, ஆனால் இது 2015-இல் 2.6 ஆகக் குறைந் துள்ளது என்று பியூ ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்துக் குடும்பங்களிலும், குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1992-இல் 3.3 ஆகவும், 2015 இல் 2.1 ஆகவும் குறைந்துள்ளது. இதுவே கிறிஸ்தவ குடும்பங்களில் 2.9 என்பதிலிருந்து 2 என்ற அளவில் உள்ளது.  இந்த மூன்று முக்கிய பிரி வுகளின் விகிதம், நாட்டின் பொது சராசரியான 2.2-ஐ ஒட்டியே உள்ளது. 

மோடி குழுவினரின்  மோசடி புள்ளிவிவரம்
ஆனால், மக்களவைத் தேர்த லில், முஸ்லிம்களை எதிரிகளாக காட்டி, இந்துப் பெரும்பான்மை யினரின் வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோ சனைக்குழு அப்பட்டமாக ஒரு மோசடியான புள்ளிவிவரத்தை வெளியிட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஏனெனில், கடந்த பல ஆண்டுக ளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறை ந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. 1951-61 ஆம் ஆண்டில், நாட்டின் மக்கள் தொகை 21.6 சதவிகிதமாக வளர்ந்தது, அதே நேரத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 32.7 சதவிகிதமாக வளர்ந்தது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு கூறியுள்ளது. 

இந்தக் கணக்குப்படியே பார்த்தாலும் 2001-2011ல் நாட்டின் பொதுவான மக்கள் தொகை அதி கரிப்பு 17.7 சதவிகிதமாக இருந்த நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவிகிதமாகவும் இருந்துள்ளது- அதாவது, 1951-61இல் 11.1 சதவிகிதத்திலிருந்து 2001-2011க்குள் 7 சதவிகிதமாக முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனவே, முஸ்லிம்களின் மக்கள் தொகை கட்டுக்கடுங்காமல் அதிக ரிக்கிறது என்ற வாதம் அவர்களின் கூற்றுப்படியே பொய்யாகி விடுகிறது. சொல்லப்போனால், முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1981-1991இல் 32.9 சதவிகிதமாக இருந்தது, 2001-2011இல் 24.6 சதவிகிதமாக குறைந் துள்ளது. அதாவது, இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகி தத்தைக் காட்டிலும், முஸ்லிம் களின் மக்கள் தொகை சரிவு அதிக மாகும்.

மாற்றிப் பேசிய  நிர்மலா சீதாராமன்
அதுமட்டுமல்ல, 2018-19 பொரு ளாதார ஆய்வறிக்கையில், “அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகை வளர்ச்சியில் கடுமையான மந்த நிலையை இந்தியா காண உள்ளது.” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியிருந்தார். முஸ்லிம் மக்கள் தொகை உயர்கிறது என்று  அப்போது ஒருவார்த்தை கூட கூற வில்லை. ஆனால், அவரே 2024 பட்ஜெட் உரையில், “வேகமான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் ஆகிய வற்றால் எழும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று மாற்றிக் கூறினார். இந்த இரண்டு உரைகளுக்கும் இடையே எந்த ஒரு மக்கள் தொகை ஆய்வோ, கணக்கெடுப்போ மேற் கொள்ளப்படவில்லை. எனினும்,இவ் வாறு பொய் கூறுகிறார் என்பது, அது தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால் தான் என்பது எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அமைச்சரின் ஜம்பமும்  ஐ.நா. பாராட்டும் என்னவானது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. 2022 ஜூலை 19 அன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை எட்டுவதில் ஒன்றிய அரசு வெற்றி பெற்றதாக ஜம்பம் அடித்திருந்தார். “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத் தின் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன” என்றார். “இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுக்குள் இருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி… நாட்டின் மக்கள் தொகையில் 69.7 சதவிகிதம் பேர்களைக் கொண்ட 31 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் கருவுறுதல் விகிதம் 2.1-ஐ விட குறைவாக உள்ளது” என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமும் (UNFPA) 2022 நவம்ப ரில் பாராட்டியிருந்தது. ஒரு பெண் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெ டுத்தால், அது ‘மாற்று கருவுறுதல் விகிதம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அதை விடக் குறைவாக, 2.0 என்ற அளவிலேயே இந்தியப் பெண்களின் கருவுறுதல் விகிதம் உள்ளது என்று ஐ.நா. கூறியிருந்தது.

நாடாளுமன்றத்தில்  ஒரு விவாதம் கூட இல்லை

கடந்த பத்தாண்டுகளில், மக்கள் தொகைப் பெருக்கம் குறித்தோ, முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முக்கியமானப் ‘பிரச்சனை’ என்றோ நாடாளு மன்றத்தில் ஒருமுறை கூட பேசப்பட்டதில்லை.

ஐந்தாவது குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019, 2021 என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இப்போதுவரை நடத்தப்பட வில்லை.இந்நிலையில், பிரதமர் மோடியின் பொருளா தார ஆலோசனைக் குழு திடீரென வெளியிட்டுள்ள அறிக்கை, தேர்தல் நோக்கத்திற்காக மக்களிடம் வகுப்புவாத விஷத்தை ஊட்டும் வகையில் மோசடியான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது என்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.