india

img

ராஜஸ்தானில் இருந்து ரயிலில் சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர் மரணம்

ராஜஸ்தானில் இருந்து ரயிலில் சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

மேற்கு வங்கத்தை சேர்ந்த புத்தா பாரிகர் (வயது 50) என்பவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையிழந்த பாரிகர், சொந்த ஊருக்கு திரும்ப பல நாட்கள் முயற்சித்துள்ளார். கடைசியில், கடந்த 29-ஆம் தேதி ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில் மூலம் பயணத்தை தொடங்கி உள்ளார். ஆனால், 30-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் உத்தரப்பிரதேசம் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோது, அவர் திடீரென மரணமடைந்தார். 

இதைத் தொடர்ந்து, பரிகாரின் கோவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளார் என நினைத்து சக பயணிகள் அனைவரும் அச்சமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, காலை 6.40 மணியளவில் மால்டா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்ததும், ரயில்வே மருத்துவர்கள் விரைந்து வந்து அவர் சடலத்தை பரிசோதித்த போது, அவர் காச நோயால் அவதிப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சூழலில், அவரது சடலத்தை மால்டா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

;