மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் இருந்து பணம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ரா தரப்பு விளக்கத்தை கேட்காமலே கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மகுவா மொய்த்ராவை எம்.பி.பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் எம்,பி தனது என்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர்க்கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.