மோடி ஆட்சியில் 8 மணி நேர வேலை நேரத்திற்குக் கூட தொழிலாளர்கள் போராடவேண்டியுள்ளதாக சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கான முன்னோட்ட பொதுக்கூட்ட காசியாபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி உரையாற்றினார்.
தொழிலாளர் வர்க்கத்தினை அடிமைத்தனத்தில் தள்ளும் நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழிலாளர்கள் தற்போது எட்டு மணி நேர வேலை நேரத்திற்குக் கூட போராட வேண்டிய சூழ்நிலையை மோடியும் அவருடைய முதலாளித்துவ கூட்டாளிகளும் உருவாக்கியுள்ளார்கள். என எம்.ஏ.பேபி பேசியுள்ளார்.