india

img

தேர்தல் ஜுரம் - சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை. இந்த சூழலில், மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் 2024-இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பயத்தில் தற்போது சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.