india

img

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம் அகில இந்திய அமைதி - ஒருமைப்பாட்டு அமைப்பு பேரணி

புதுதில்லி, ஜூன் 26- இந்தியா உள்பட பல்வேறு நாடு களுக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் நடவடி க்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து தலைநகர் தில்லியில் அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு ஸ்தாபனம் (AIPSO-All India Peace and Solidarity Organisation) மாபெரும் பேரணியை நடத்தியது. இந்தப் பேரணி/ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியாவிற்கு வருகைதந்துள்ள நிலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியா,  கியூபா, ஈரான், வெனிசுலா மற்றும் பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்திருப்ப தற்கு எதிராகவும், அதன் ஆக்கிர மிப்பு யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடந்தது. கண்டனப் பேரணி தலைநகர் தில்லி யில் மண்டி ஹவுஸிலிருந்து புறப்பட்டு, அமெரிக்கன் கலாச்சார மையத்தைச் சென்றடைந்தது. பேரணி/ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்ற அறிஞர்கள், ஆர்வலர் கள், மகளிர், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். பேரணி/ஆர்ப்பாட்டத்தின் இறுதி யில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு அகில இந்திய அமைதி மற்றும் ஒருமை ப்பாடு ஸ்தாபனத்தின் தலைவர் நிலோ த்பல் பாசு தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில் பிறநாடுகளைக் கபளீகரம் செய்திடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். மேலும்,  அமெரிக்காவின் அடாவடித்தனமான நடவடிக்கைகளையும், அவற்றிற்கு இந்தியா அடிபணிந்து செல்வதையும் கண்டித்தார். சிபிஐ தேசியச் செயலாளர் து.ராஜா, தமது உரையின்போது, இந்திய நாட்டு மக்கள், பாஜகவின் அமெரிக்க ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக இருப்ப தாகக் குறிப்பிட்டார். பாஜக தேசியம் குறித்து ஏராளமாகப் பேசினாலும், நடைமுறையில் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு  அடிபணிந்து  நாட்டு மக்களின் நலன்களைக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் மேலாதிக்கத்தைக் கண்டித்திடும் விதத்தில் அமெரிக்க அமைச்சர் பாம்பி யோ தில்லி வரும்போது அவருக்கு எதி ராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த செய்தியை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவுற்றது. (ந.நி.)

;