இந்தியாவில் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தான் பெரும்பாலும் அதிகமாக விற்பனையா கும். அதாவது மருந்து சந்தையில் மேற் குறிப்பிட்ட இரண்டு மருந்துகளும் ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிக மாகவே விற்பனை ஆகும்.
இந்நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாத மருந்து விற்பனை யில் நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய் சார்ந்த 2 வகையான மருந்து களை பின்னுக்குத்தள்ளி ஆஸ்துமா, சுவாசக்கோளாறுகளுக்கு பரிந்து ரைக்கப்படும் போராகோர்ட் (FORA CORT) விற்பனை முதலிடம் பிடித்துள் ளது. டிசம்பர் மாதம் ரூ.85 கோடிக்கும், நவம்பர் மாதம் ரூ.81 கோடி அள விலும் போராகோர்ட் மருந்து விற்பனை ஆகியுள்ளதாக மருந்துச் சந்தையில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐக்யூவிஐஏ அமைப்பு புள்ளிவிபரத் துடன் வெளியிட்டுள்ளது.
குளிர்காலங்களில் சுவாசக் கோளாறு அதிகரிப்பதன் காரண மாகவே போராகோர்ட் மருந்து விற் பனை மற்ற மருந்துகளை விட 22 சதவீதம் விற்பனை அதிகரித்தி ருப்பதாகவும், இதே போல மஞ்சள் காமாலை, அஜீரணம், பசியின்மை, கல்லீரல் கோளாறுகள் ஆகியவற் றிற்கு பயன்படுத்தப்படும் லிவ் - 52 (LIV-52) மருந்து விற்பனையும் 36 சத வீதம் அதிகரித்துள்ளதாக ஐக்யூ விஐஏ அமைப்பு கூறியுள்ளது. போராகோர்ட் விற்பனை அதிக ரிப்பால் நோயெதிர்ப்பு சக்தி மருந்து கள் 14 சதவீதம் சரிவையும், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் 11 சத வீதம் சரிவையும் சந்தித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் நோயெ திர்ப்பு சக்தி மருந்துகள் ரூ.67 கோடிக் கும், நீரிழிவு நோய்களுக்கான மருந்து கள் ரூ.68 கோடிக்கும் விற்பனையாகி யிருப்பதாக ஐக்யூவிஐஏ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.