india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுதில்லி
கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுபான கொள்கை வழக்கில் கைது செய் யப்பட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால் கடந்த  மார்ச் 21 அன்று அமலாக்கத்  துறையால் கைது செய்யப் பட்டார். தற்போது கெஜ்ரி வால் திகார் அடைக்கப் பட்டுள்ள நிலையில், தனது கைது சட்டவிரோதமானது. அதனால் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி தில்லி  உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு  செவ்வாயன்று உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மா அமர்வில் விசா ரணைக்கு வந்த நிலையில், மதியம் 2:30 மணியளவில் அவர் தீர்ப்பை வாசித்தார். அதில்,”மதுபான கொள்கை வழக்கில் கைது  செய்யப்பட்ட தில்லி முதல்  வர் கெஜ்ரிவால் கைது  செய்யப்பட்டது சட்டவிரோ தம் அல்ல. கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தற்கான ஆதாரத்தை அம லாக்கத்துறை அளித்துள் ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

புதுதில்லி
100% ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கு
ஏப்ரல்16-ல் விசாரணை

மோடி பிரதமர் ஆன பின்பு இவிஎம் எனப்  படும் வாக்குபதிவு இயந்தி ரத்தின் முடிவுகள் பற்றி பல்  வேறு சந்தேகங்கள் கிளம்பி  வரும் சூழலில், இவிஎம்  இயந்திரத்தில் அளித்த  வாக்குகள் சரியானதாக இருக்கிறதா என்பதை அறி யும் ஒப்புகைச்சீட்டுகளை வர விருக்கும் மக்களவைத் தேர்த லில் 100% எண்ண உத்தர விடக் கோரி ஜனநாயக சீர் திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்  கல் செய்யப்பட்டு இருந்தது.  கடந்த ஏப்ரல் 2 அன்று விசார ணையின் போது இந்த  வழக்கை மே 17க்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். ஆனால் மக்களவைத் தேர்த லுக்கு முன்பே வழக்கை விசா ரிக்க வேண்டும் என மூத்த  வழக்கறிஞர்கள் கபில் சிபல்,  பிரசாந்த் பூஷண் செவ்வா யன்று கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் ஏப்ரல் 16 அன்று விசா ரணைக்கு ஏற்பதாக அறி வித்துள்ளது.