india

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 3 கட்டமாக (செப்.18, செப். 25, அக்.1) சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ள நிலையில், பாஜக 44 வேட்பாளர் கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் கள் பட்டியலை திங்களன்று காலை வெளியிட்டது. இதில் 15 வேட்பாளர் கள் முதல் கட்டத் தேர்தலிலும், 10 வேட்பாளர்கள் 2ஆவது கட்டத் தேர்தலிலும், 19 பேர் மூன்றாவது கட்டத் தேர்தலிலும் போட்டியிடு வார்கள் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களிலேயே வேட்பாளர் பட்டியல் வாபஸ் பெறப் பட்டதாக பாஜக அறிவித்தது. அறிவித்த வேகத்திலேயே வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பா ளர்கள் பெயர்களை மட்டுமே அறிவிக்க முடிவு செய்யப்பட்டி ருந்த நிலையில், தவறுதலாக 2 மற்றும் 3ஆம் கட்ட தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர் கள் கொண்ட பட்டியலும் வெளியா னதால் வாபஸ் பெறப்பட்டது” என பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவு  கூறியுள்ளது.

தொடர்ந்து திங்களன்று மதியம் 1 மணியளவில் முதல் கட்டத் தேர்தலுக்கான 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட் ட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவே பாஜக திக்கித் திணறி வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.