india

img

தோல்வி அல்ல, எச்சரிக்கை

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பாஜக 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. பத்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கூடுதலாகப் பெற்ற காங்கிரசைப் போல, சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பாஜக பெற்றுள்ளது. 5 மாநிலங்களையும் இப்படி ஒட்டுமொத்தமாக ஒப்பிடுவது சரியில்லைதான். 
தனியாக ஒரு மாநிலம் என்று மிசோரமை எடுத்துக்கொண்டால், பாஜகவைப்போல நான்கு மடங்கிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் ஒரே ஓர் இடத்தையும், பாஜக இரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன.
இவை தெரிவிக்கிற முக்கியமான செய்தி என்னவென்றால், இந்திய ஜனநாயகம் என்பது உண்மையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களே வெல்கிறார்கள்.
அதனால், மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற கருத்து தவறானது. முரண்பாடுகளைக் களைந்து, தேவைப்படும் இடங்களில் விட்டுக்கொடுத்து... என்று இந்தியா கூட்டணி தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புதான் இந்த முடிவே தவிர, வேறில்லை. அப்படியான நடவடிக்கைகளின்மூலம், 2024இல் பாஜக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்பதைத்தான் காங்கிரஸ் பெற்றுள்ள கூடுதல் வாக்குகள் சுட்டிக்காட்டுகின்றன!
- அறிவுக்கடல்