india

நீதிபதி நியமனத்தில் சாதிக்கு முன்னுரிமையா?

புதுதில்லி,ஜூலை 4- நீதிபதிகளை நியமனம் செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வரு கிறது. உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்நாத் பாண்டே அனுப்பிய கடிதத்தில்  கூறியிருப்பதா வது: உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்ப தில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னு ரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் அடுத்த நீதிபதியை நிய மிப்பதில் நீதிபதி உறவினர்களுக்குத் தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெ டுப்பது, பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே மூத்த நீதிபதி களுக்கு பிடித்த மற்றும் சாதகமாக இருக்கும் நீதிபதிகள் தேர்வு நடக்கி றது. இந்த தேர்வுமுறை ரகசியமாக நடைபெறுகிறது. அதன் பிறகு தான் அவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் நீதித் துறையில் தனது 34 வருட அனு பவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய நீதிபதிகள் நியமன கமி ஷனை உங்கள் அரசாங்கம் கொண்டு வந்தபோது, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தங்களது அதிகார வரம்பில் தலையிடுவதாகக் கருதிக் கொண்டு, அரசியலமைப்பிற்கு முர ணானது என்று அறிவித்து, இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதன் மூலம் உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதி பதிகளை நியமிப்பதில் குடும்ப உறுப்பினர்களை நியமனம் செய்வ தற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரு கின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;