india

img

வாய்க்கால்கள் தூர்வாராததால் வந்து சேராத பாசன நீர்... கருகும் 600 எக்டேர் சம்பா விதைப்பு பயிர்கள்

சீர்காழி:
கொள்ளிடம் பகுதியில் தண்ணீரின்றி வறட்சியால் சம்பா நெற்பயிர் கருகுவதால்விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ள னர்.  நாகை மாவட்டம் கொள்ளிடம், கடைமடைப் பகுதியாகும். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாத காலமாகியும் கடைமடை பகுதிக்குதண்ணீர் வந்து சேரவில்லை. மேட்டூரி லிருந்து தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் சுமார் 22 ஆயிரம் எக்டேர்விளை நிலங்களில் நேரடி விதைப்பு மற்றும்சம்பா நடவுப் பயிர் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. சில தினங்களுக்கு முன்பு அவ்வப்பொழுது பெய்த மழையை வைத்து உழவுப் பணியை மேற்கொண்ட விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நேரடிவிதைப்பு செய்தனர்.
மேட்டூரிலிருந்து தண்ணீர் பாச னத்திற்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்ற மடைந்தனர். பாசனத்திற்கு தண்ணீர் வாய்க்கால்களில் வந்து சேரவில்லை. பிரதான பாசன வாய்க்கால்களில் மட்டுமே சென்ற தண்ணீர் கிளை வாய்க்கால்களில் வரவில்லை. காரணம் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. கடைமடைப் பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு தண்ணீர் இதுவரை வந்து சேராததால் சம்பா நெற்பயிர் முழுவதும் கருகும்நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி செலவுசெய்து நேரடி விதைப்பு செய்த விவசாயிகளின் குடும்பங்கள் தற்பொழுது வேதனையில் உள்ளது. மகேந்திரப்பள்ளி காட்டூர், செம்மங்குடி உள்ளிட்டகிராமங்களுக்கு பாசன வசதி தரும்கோட்டை வாய்க்கால், பெரியவாய்க் கால், தைத்தான்வாய்க்கால், குழாயடி வாய்க்கால், செம்மங்குடிவாய்க்கால் உள்ளிட்ட அனைத்து கிளை வாய்க்கால்களும் தூர்வாராததால், தண்ணீர் பாசனத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை. 

இது குறித்து மகேந்திரப்பள்ளி பாசனதாரர் சங்கத் தலைவர் ராஜாராமன் மற்றும் விவசாயிகள் சத்தியசீலன், ராமலிங்கம் உள்ளிட்டோர் கூறுகையில், மகேந்திரப்பள்ளி ஊராட்சியில் மட்டும் 600 எக்டேர் நிலத்தில் மேட்டூர் தண்ணீரை நம்பி விவசாயிகள் நேரடி விதைப்பு செய்திருந்தோம். மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே வீணாகச் சென்று கடலில் கலந்தது. ஆனால் பாசனத்திற்கு இதுவரை வந்துசேரவில்லை. தண்ணீரின்றி 600 எக்டேர் சம்பா விதைப்பு பயிர் கருகி வருகிறது. இனிமேல் பயிரை காப்பாற்றுவது சிரமம் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தண்ணீர் பாசனத்திற்கு இதுவரை வரவில்லை.  இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடவும், கிளை வாய்க்கால் களை போர்க்கால அடிப்படையில் தூர் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

;