ஹரப்பா நாகரிகம் என் பதை, சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்றும் குறிப்பிடலாம் என சி.இ. ஆர்.டி.,யின் ஆறாம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள, என்.சி.இ.ஆர்.டி., எனப் படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது.
தற்போது, ஆறாம் வகுப்புக் கான சமூக அறிவியல் புத்தகத் தில் சில மாற்றங்கள் என்ற பெய ரில் வரலாற்றை திரித்துள்ளனர்.
ஹரப்பா என்பது நிலப்பரப்பை யும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும் எனக் கூறிவிட்டு அத னால், சிந்து - சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம் என சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
தவிர, சரஸ்வதி நதி தொடர்பாக வும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது என்கிறது.
சமூக அறிவியலுக்கு ஒருங்கி ணைந்த பாடநூல்: முன்பு வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் புவி யியல் பாடங்களுக்கு தனித்தனி பாடப்புத்தகங்கள் இருந்தன. இப்போது சமூக அறிவியலுக்கு ஒரே பாடநூல் உள்ளது. சமூக அறிவியல் பல துணைப் பிரிவு களைக் கொண்டுள்ளது, ஆனால் மாணவர்கள் இந்த விதிமுறை களால் பயப்படத் தேவையில்லை என்று புத்தகம் விளக்குகிறது. பாடநூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்,’ ‘கடந்த காலத்தின் துணி,’ ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்,’ ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்,’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை.’
ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகமாக மாற்றிய பாஜக
சரஸ்வதி நதி குறித்து அதீதம்: பழைய வரலாற்றுப் பாடப்புத்த கத்தில், “சரஸ்வதி நதி ரிக்வேத பகுதியில்” ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,
புதிய பாடப்புத்தகத்தில், இந்திய நாகரிகத்தின் தோற்றம் தொடர்பான அத்தியாயத்தில் “சரஸ்வதி நதி” பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் ஹரப்பா நாகரிகத்திற்குப் பதிலாக ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
புவியியல் பிரிவு சேர்க்கைகள்
புதிய பாடப்புத்தகத்தின் புவியியல் பகுதியில் இமய மலையைக் குறிக்கும் வகையில் காளிதாசனின் ‘குமாரசம்பவ’ கவிதை இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சங்கக் கவிதைகளையும் நிலப்பரப்புட னான அதன் தொடர்பையும் குறிப்பிடுகிறது.
பிரைம் மெரிடியன்
கிரீன்விச் மெரிடியன் முதல் பிரைம் மெரிடியன் அல்ல என்று புத்தகம் விளக்குகிறது. ஐரோப்பாவிற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பு, இந்தியா தனது சொந்த பிரதான நிலநடுக் கோட்டைக் கொண்டிருந்தது, இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி வழியாக சென்றது.
சாதி மற்றும் பாகுபாடு : பழைய அரசியல் அறிவியல் பாடப்புத்த கத்தைப் போலவே, புதிய புத்தகத்திலும் பன்முகத்தன்மை பற்றிய அத்தியாயம் உள்ளது. இருப் பினும், அதில் சாதி அடிப்படை யிலான பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகத்தில் ஒருமுறைதான் “சாதி” என்ற வார்த்தை வரு கிறது. பழைய புத்தகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அவர் நடத்திய பட்டியலின மக்கள் உரிமை களுக்கான போராட்டம், சாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த அவரது அனுபவங்கள் பற்றிய முழுப் பகுதியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.