india

img

உலகளாவிய தங்க மறுசுழற்சியில் இந்தியா 4ஆவது இடம்!  

உலகம் முழுவதும் மறுசுழற்சி செய்யப்படும் மொத்த தங்கத்தில் இந்தியா 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கிறது.  

தங்கத்தின் விலை உயரும்போது பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து ஆதாயம் அடைவது, அதன்பிறகு புதிய தங்க நகைகளுக்கு செலவழிப்பதில் வழக்கமாக உள்ளனர். தங்கத்தின் விலை உயரும்போது பழைய நகைகளை மாற்றும் நுகர்வோர்களின் சதவீதம் அதிகரிக்கிறது.  

மேலும், தங்கம் சுத்திகரிப்பு மற்றும் தங்கத்தை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதிலும் இந்தியா சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளது.  

இதுகுறித்து உலக அளவில் தங்கம் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி அதிகம் செய்யும் நாடுகள் குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனா மொத்தம் 168 டன் தங்கத்தை 2021 ஆம் ஆண்டில் மறுசுழற்சி செய்துள்ளது. 80 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்து இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 78 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இந்த பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கிறது.

சுத்திகரிப்பை பொறுத்தவரையில், 2021 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 1,500 டன் தங்கத்தை சுத்திகரிப்பு செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இதன்அளவு 300 டன்னாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய தங்க விலை நகர்வுகள், எதிர்கால விலை எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார பின்னணி ஆகியவற்றால் மறுசுழற்சி இயக்கப்படுகிறது.

;