பீகார் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 மக்கள வைத் தொகுதிக்கான வேட்பாளர்களை சனி யன்று அறிவித்தது. தராரி தொகுதியில் சுதாமா பிரசாத்தும், அர்ரா தொகுதியில் சந்தீப் சவுரவும், கரகாட் தொகுதியில் ராஜாராம் சிங் களமிறங்கி யுள்ளனர்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மத்தி யப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் குறைந்த பட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றும் என அக்கட்சி யின் தலைவர் ஜித்து பட்வாரி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண் களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியன்று முசா பர்நகரில் 14 வயது மனநலம் குன்றிய சிறுமி பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 2 நாட்க ளுக்கு முன் பாரபங்கியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பி டத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநில மக்களவைத் தேர்த லில் போட்டியிட உள்ள பீம் ஆர்மி அமைப் பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை வழக்கு மூலம் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி உள்துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட்டுக்கும் (49) அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் விரைவில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல தாதாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக வியாழனன்று உயிரிழந்தார். அவரது உடல் பலத்த பாதுகாப்புக்கு இடையே சனி யன்று காஜிப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாரமதி தொகுதி (மகாராஷ்டிரா) தனக்கு ஒதுக்கப்படாததால் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என சிவ சேனா (ஷிண்டே) மூத்த தலைவர் விஜய் ஷிவ்தாரே கூறியுள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளை களில், அமெரிக்க ஊழியர்களை பணியிலி ருந்து நீக்கிவிட்டு அந்த இடங்களில் ஹெச்1-பி விசாவில் இந்தியர்களுக்கு வேலை வழங்கப்படு வதாக பணியிழந்தோர் புகார் தெரிவித்துள்ளனர்.