பாஜக ஆளும் அசா மில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்த ஹிமந்தா பிஸ்வா முதல்வராக உள் ளார். மக்கள் பணியை விட முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித், பழங்குடி மக்களை ஒடுக்குவதிலேயே முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தீவிரமாக இருக்கிறார். கடந்த ஆண்டு முஸ்லிம் மக்களை ஒடுக்கும் முனைப்பில் சிறார் திரு மணங்களை தடுப்பதாகக் கூறி 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட முஸ்லிம் குடும்பங் களை சிறையில் அடைத்தார். அடிக்கடி முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா வெறுப்பு பேச்சை விதைத்து வருகிறார்.
இந்நிலையில், மக்க ளவை தேர்தல் நெருங்கி யுள்ளதால் ராகுல் காந்தி யாத்திரையால் கலக்கம டைந்துள்ள அசாம் பாஜக, கிறிஸ்தவர்கள் மீது அடக்கு முறையை ஏவி வன்முறை யை தூண்டி வருகிறது. அசாம் மாநிலத்தின் தலை நகரான கவுகாத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நக ரங்களில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில், இயேசு கிறிஸ்து தொடர்பான அடையாளத்தை அகற்ற வேண்டும் என்றும், கிறிஸ் தவ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பெற்றோர் கள், கன்னியாஸ்திரிகள் இனிமேல் சாதாரண உடை கள்தான் அணிய வேண்டும் என்றும் மாநிலத்தின் பெரும் பாலான இடங்களில் இந்துத் துவா கும்பல் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. அசாமில் கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் வாழும் சூழலில் இந்துத்துவா குண் டர்களின் இந்த மதவெறுப்பு போஸ்டரால் மாநிலம் முழு வதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிறிஸ் தவ மிஷினரி பள்ளி நிர்வா கங்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ள நிலை யில், பாஜக அரசு நடவ டிக்கை எடுத்ததாக இது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.