india

img

ஜிடிபி அதிகபட்சம் 5.2 சதவிகிதம்தான்... கடும் அடிவாங்கப் போகும் இந்தியாவின் ஏற்றுமதி...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியாவிற்கு வர வேண் டிய முதலீடுகள், உற்பத்தி கடும் பாதிப்பைச் சந்திக்கும். உற்பத்தி சரியும் என்று ‘கிரிசில்’ (Crisil Ratings) நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் எச்சரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவினால், இந்தியாவின் நுகர்வு,முதலீடுகள் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்துமே அடி வாங்கும். இது மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்மையைக்குறைக்கும், நிதிச் சந்தைகள் எல்லாமேஅடி வாங்கும் என ‘கிரிசில்’ கூறியுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி-யும், 2020-21 நிதியாண்டில் 5.2 சதவிகிதமாக குறையும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் வரை, வளர வாய்ப்பு இருப்பதாக ‘கிரிசில்’ நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளிட்டவைகள் காரணமாக, தற்போது அதனை 5.2 சதவிகிதமாக குறைத்துள்ளது.இதேபோல, கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக, இந்தியாவிற் கான முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்திக்கும்என்று உலகின் முன்னணி பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனமான ‘பிட்ச்’(Fitch Ratings) கூறியுள்ளது. 2020-21இல் இந்தியாவின் ஜிடிபி-யையும் 5.1 சதவிகிதமாக ‘பிட்ச்’ குறைத்துள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21 நிதியாண்டில் 5.6 சதவிகிதமாகவும், 2021-22 நிதியாண்டில் 6.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று ‘பிட்ச்’ கூறியிருந்தது. நடப்பு 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 5.0 சதவிகிதமாகவும், 2020-21 நிதியாண்டில் 5.1 சதவிகிதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மோடி அரசின் தடாலடியான பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால், இந்தியா ஏற்கெனவே பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழில்துறை நசிவு, வேலையின்மை ஆகியவற்றால், மக்களின் நுகர்வு திறன் மோசமான நிலைக்கு போனது. தற்போது கொரோனா பாதிப்பும் சேர்ந்து கொண்டதால், முதலீடுகள் மேலும் குறையும். ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்று ‘பிட்ச்’ கணித்துள்ளது.

;