india

img

இந்தியாவில் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்!  

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று  முடக்கியுள்ளது.  

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான பரப்பிய 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுபவை.      

மேலும் 3 ட்விட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.