பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ் செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறி வித்துள்ளது. மெட்டா நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப் படுத்தியது. இன்ஸ்டாகிராமிலி ருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர் (Messen -ger) செயலி மூலம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலை யில், டிசம்பர் மாதத்தோடு அந்த சேவையை நிறுத்துவதாகவும், குறுஞ்செய்தி அல்லது அழைப்பு கள் செய்யமுடியாது என்றும், ஏற்க னவே இருக்கும் உரையாடல்களை படிக்க முடியும் என மெட்டா அறி வித்துள்ளது. மெட்டா தனது மெசஞ்சர் தளத்தை என்ட்-டூ-என்ட் (end-to-end encryption) பாது காப்பு முறைக்கு மாற்றவிருப்பதால் இந்த சேவையை நிறுத்தியிருக்க லாம் என தகவல் வெளியாகியுள்ளது.