india

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது பற்றி 3 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும்! உ.பி. பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி, ஜூன் 16 - அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம் குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகம்மது நபிகளை அவதூறு செய்யும் வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக செய்தித் தொடா்பாளா்கள் நூபுர் சர்மா,  நவீன் ஜிண்டால் ஆகியோரைக் கைது  செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் சிறு பான்மை இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தினர். அதனொரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலத்திலும் போராட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்ட நிலையில், சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறை ஏவினர். 300-க்கும் அதிகமானோரைக் கைது செய்த துடன், அவர்களை லாக்-அப்பில் அடைத்து  கொடூரமாகத் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகின.  அத்துடன் இல்லாமல், ஆளும் பாஜக  அரசானது, போராட்டத்தில் கலந்து கொண் டவர்களைக் குறிவைத்து, அவர்களின் வீடு களை புல்டோசர் மூலம் இடிக்கும் நட வடிக்கையிலும் இறங்கியது. குறிப்பாக, அலிகாரில் அரசியல் செயற்பாட்டாளர் ஜாவத்  முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.  

லக்னோ, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரி வித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பா ளர் நூபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யா ராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.  இதுதிட்டமிட்ட பழிவாங்கல் நடவடி க்கை என்றும்,  புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஜம்மியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விடு முறைக்கால அமர்வில் நீதிபதி  போபண்ணா, விக்ரம்நாத் அமர்வு  முன்பு வியாழனன்று விசாரணைக்குவந்தது. அப்போது, புல்டோசர் மூலம் வீடு களை இடிக்கும் விவகாரத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அர சுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உத்தரப்பிரதேச அரசு மூன்று  நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பிரயாக்ராஜ், கான்பூர் சிவில் அதிகாரிகள் உரிய பதி லளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும், “மாநில அரசின் இடிப்பு நட வடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள், “அதேநேரம் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உரிய சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு இருக்க வேண்டும். இடிப்பு நடவடிக்கைகள் என்பது பழிவாங் கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.  இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 21-ஆம் தேதிக்கும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

;