india

img

இணையவழித் தொடர்புகளையும், மொபைல் சேவைகளையும் மீண்டும் ஏற்படுத்திடுக காஷ்மீர் ஊடகத்தினர் அமைதிவழியில் கிளர்ச்சி

புதுதில்லி, அக்.4- இணைய வழித் தொடர்புகளையும், மொபைல் சேவைகளையும் மீண்டும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி காஷ்மீர் ஊடகத்தினர் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காஷ்மீரை தளமாகக் கொண்டு செயல்பட்ட இதழாளர்களின் அமைப்புகள் வியாழன் அன்று ஸ்ரீநகரில் காஷ்மீர் பிரஸ் கிளப் முன்பு கோரிக்கைப் பதாகைகளை ஏந்தி, அமைதியாக அமர்ந்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். அப்போது, ‘மாநிலம் சிறைப்படுத்தப்பட்டிருத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக’, ‘60 நாட்களாக முடக்கப்பட்டிருக்கின்ற இணையவழித் தொடர்பு மற்றும் மொபைல் சேவைகளை மீண்டும் ஏற்படுத்திடுக’, ‘ஊடக வசதி மையம் என்கிற கிளைச் சிறையில் எங் களை அடைக்காதே’ போன்ற பதாகைகளை ஏந்தி இருந்தார்கள்.
ஊடகங்களை நசுக்கும் நடவடிக்கை
மாநிலத்தில் இயங்கும் ஊடகவிய லாளர்களின் 11 அமைப்புகள் இணைந்து  ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஊடகங்களை நசுக்கும் நடவடிக்கை’ என்று தலைப்பிட்டுள்ள அந்த அறிக்கையானது, “தனியார் ஓட்டல் ஒன்றில் அரசின் சார்பில் ‘ஊடக வசதி மையம்’ என்று ஒரு கூடத்தை ஏற்படுத்தி, அதிலிருந்துதான் ஊடகவிய லாளர்கள் செயல்பட வேண்டும் என்று கட்டா யப்படுத்தியிருப்பது, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து எவ்விதமான செய்தி யும் வெளி உலகத்திற்குப் போகக்கூடாது என்பதற்கான நடவடிக்கையேயாகும்,” என்று கூறுகிறது.
400 பேருக்கு ஒரே ஒரு செல்பேசி
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: “இந்தக் கூடத்தில் வெறும் 9 கணினி களும், ஒரு செல்பேசி தொடர்பும் மட்டுமே இருக்கின்றன. 400 ஊடகவியலாளர் களுக்கு இது எப்படிப் போதுமானதாகும்! நாங்கள் தயாரித்த செய்திகளை அனுப்பு வதற்காக மணிக்கணக்காக, ஒவ்வொரு நாளும் நாங்கள் வரிசையில் நிற்க வேண்டி யிருக்கிறது. வைஃபி சர்வீஸ் தடை செய்யப் பட்டிருக்கிறது. அனைத்து இதழிய லாளர்களும் தங்கள் முழு முகவரியையும் அடையாள அட்டைகளையும் அரசுக்குக் கொடுத்துள்ள போதிலும்கூட, அவர்கள் சொந்தமாக இணையவழித் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, தங்கள் சொந்த மடிக்கணினிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடையாது. ஆகஸ்ட் 5இலிருந்து காஷ்மீரில் அச்சாகும் எந்தப் பத்திரிகையும் தங்கள் இணையப் பதிப்பை வெளியிடவில்லை. இணையத்தொடர்பு இல்லாததே இதற்குக்  காரணமாகும். காஷ்மீர் பிரஸ் கிளப் பல முறை ஆட்சியாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளது. மீண்டும் எப்போது இவ்வசதிகள் அளிக்கப்படும் என்பதற்கு எதுவும் கூற அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;