india

img

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும் நிலையில் உள்ளது

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டும் நிலையில் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 15 நாட்களாக காற்று மாசு அதிகமாக உள்ளது. இதனை சரி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு 100-200 என்ற அளவில் இருந்தால் மிதமான பிரிவு, 201 -300 மோசம், 301 -400 மிக மோசம், 401-500 என்ற அளவில் இருந்தால் கடுமையான அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று அதிகாலை, காற்றில் தரம் தீவிரம் என்ற அளவுக்கு சென்றதுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, புதன்கிழமை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. 

;