திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்கத்தின் சிலிகுரி பகுதியில் பல்வேறு காரணங்களால் முற்றிலும் மாநகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை
எதிர்கொண்டு வரும் நிலையில், மாநில அரசின் மோசமான கொள்கையால் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. பெண்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஹாஷ்மி சௌக்கில் (வீனஸ் மோர்) போராட்டம் நடத்தினர்.