india

img

இந்தியாவில் கரோனா வைரஸ்? தீவிர கண்காணிப்பில் 11 பேர்

இந்தியாவில், கரோனா வைரஸ் பாதிப்பின் சிறிய அறிகுறிகளுடன் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 41 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1300க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், வியட்நாம், சவுதி, பிரான்ஸ், அமெரிக்க, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரஸ் தொற்றின் சிறிய அறிகுறிகளுடன் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையைச் சேர்ந்த 2 பேரும், பெங்களூர்  சேர்ந்த ஒருவரும், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவை சேர்ந்த 7 பேரும் அடங்குவர்.

நோய் தொற்றை தடுக்கும் நோக்கில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் உள்ளிட்ட சோதனைகள் நடக்கின்றன. மேலும், கோவை, திருச்சி, விசாகப்பட்டினம், அஹமதாபாத், குவஹாத்தி, கயா, திருவனந்தபுரம், ஜெய்பூர் உள்ளிட்ட மேலும் 12 விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

;