india

img

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு, இதுவரை 7,177 பலியாகி உள்ளனர். மேலும், 1,85,445 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 136 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் 54,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கண்காணிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பணியானது பாராட்டுக்குரியது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை, தில்லி அருங்காட்சியகத்தை மூடவும், ராஜஸ்தானில் பொது இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை விதித்தும், உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய பூங்காக்களை மூடவும், மற்ற சுற்றுலா தலங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

;