india

img

கோவிட்-19: இந்தியாவில் சமூக பரவல் உள்ளது - வல்லுநர்கள் தகவல்

இந்தியாவில் பல பகுதிகளில் கோவிட்-19 தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியாவில் கோவிட்-19 தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவ் தெரிவித்தார். இந்த நிலையில், வைராலஜி, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் உள்ள வல்லுநர்கள், கோவிட்-19 தொற்று சமூக பரவல் நிலையை ஏற்கனவே எட்டியுள்ளதாகவும், ஐ.சி.எம்.ஆரின் கணக்கெடுப்பு யதார்த்த நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள்  இயக்குனர், டாக்டர் எம்.சி.மிஸ்ரா கூறுகையில், ”இந்தியாவில் கோவிட்-19 தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. பாதிப்பு இல்லாத நகரங்களிலும், தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அரசு முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், பதட்டமில்லாமலும் இருக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
 

;