india

img

தேர்தல் நேரத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியம் உயர்வு!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலிலிருந்து வருகிறது. இந்த நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) கீழ், 3-10% ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு; இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றதாகவும் அறிவித்துள்ளது.
ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியம் 10% உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.5% உயர்த்தி, ரூ.294இல் இருந்து ரூ.319ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. 
தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு மக்களைக் கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட, தேர்தல் ஆணையம் எப்படி அனுமதி வழங்கியது என்று அரசியல் செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

;