33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவர் ஹாக்கி பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்திய நேரப்படி வியாழனன்று மாலை இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா வெல்லும் 4ஆவது பதக்கம் (நான்கும் வெண்கலம்) இதுவாகும்.