பாஜக ஆளும் ஹரியானாவின் பரீதாபாத்தில் பசுவைக் கடத்திச் செல்வதாக பழிசுமத்தி பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவனான ஆர்யன் மிஸ்ராவை பசுக் குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இந்த படுகொலைச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் ஆர்யன் மிஸ்ராவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.