india

img

ஜேஜேபி, சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு

சண்டிகர், மே 8- ஜேஜேபி, சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்ப தாக அறிவித்த நிலையில், ஹரியானா வில் பாஜக ஆட்சி மீண்டும் கவிழும் நிலையில் உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களி லும், இந்திய தேசிய லோக் தளம், ஹரி யானா லோகித் (எச்எல்பி) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும், 6 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பெரும்பான்மைக்கு 42  இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா வுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி யும், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுட னும் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் முதல்வராக மனோகர்லால் கட்டார் பதவியேற்ற நிலையில், ஹரி யானா பாஜக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்வதற்குள் கடந்த மார்ச் மாதம் கவிழ்ந்தது. மக்களவை சீட் பிரச்ச னையால், அரசுக்கு அளித்த ஆதரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்ற நிலை யில், ஹரியானா முதல்வர் மனோ கர்லால் கட்டார் தனது முதல்வர் பத வியை ராஜினாமா செய்தார்.

இருப்பினும் 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் எச்எல்பி கட்சி யின் எம்எல்ஏ ஆதரவுடன் மீண்டும் பெரும்பான்மை பெற்ற (46 இடங்கள்) பாஜக, முதல்வர் மனோகர் லால் கட்டாரை நீக்கி, புதிய முதல்வராக நயாப் சிங் சைனியை நியமித்தது.  நயாப் சிங் சைனி முதல்வராக பதவி யேற்று (மார்ச் 12,2024) 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஹரியானா  பாஜக ஆட்சிக்கு சிக்கல் வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஜேஜேபி, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு
செவ்வாயன்று 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறி வித்தனர். இதனால் பாஜகவின் பலம் 42 ஆக குறைந்தது. ஆனால் ஹரி யானா பாஜக ஆட்சிக்கு எவ்வித பிரச்ச னையும் இல்லை என்று முதல்வர் நயாப் சிங் சைனி கூறிய நிலையில், புதனன்று பாஜகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். அடுத்த சில மணிநேரங்களில் 10 எம்எல்ஏக்களை கொண்ட ஜேஜேபி கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இத னால் ஹரியானா சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சிக்கு முற்பட்டால், ஆட்சி அமைக்க ஆதரவு பலத்தின் எண்ணிக்கை 47 ஆக  உயர்ந்த நிலையில், பாஜக கூட்டணி யின் பலம் 42 ஆக சரிந்தது. இதனால்  ஹரியானாவில் பாஜக ஆட்சி மீண்டும் கவிழும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. 

ஜேஜேபி கட்சியை உடைக்க பாஜக முயற்சி
தங்களது ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளதால் தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜேஜேபி கட்சியை உடைக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. தற்போது ‘ஆப்ரேசன் லோட்டஸ்’ (பாஜகவின் ஆள்பிடி வேலை) மூலம் ஜேஜேபி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

;