பாஜக அரசமைப்புக்கு எதிரானது. பாஜக அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை ஒழிக்க விரும்புகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று ஆரம்பம் முதலே பாஜகவினர் கூறி வந்தனர். இவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள். அரசியலமைப்பு சட்டத்தையும் அம்பேத்கர் செய்த பணியையும் ஒழிப்பதே அவர்களின் ஒரே வேலையாக உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.
எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி
பிரதமர் மோடிக்கு அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் அவரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே
அமித் ஷா, மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜக-வும் பாபா சாகேப் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பது தெரிகிறது. அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே அவ்வளவு வெறுப்பு. இதற்கு தேசம் பதில் சொல்லும்.
ஆம் ஆத்மி நாடாளுமன்ற தலைவர் சஞ்சய் சிங்
நாடாளுமன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிப்பது அரசியல் சாசனத்தையும் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் செயலாகும். அமித் ஷா ஜி, நீங்கள் பாபாசாகேப்பிற்கு மாலை போடுகிறீர்கள், ஆனால் உங்கள் இதயத்தில் வெறுப்பு இருக்கிறது. இந்த நாட்டின் முன் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சிபிஎம் மக்களவை எம்.பி., அம்ரா ராம்
ஆஸ்கர் விருது போட்டி லாபட்டா லேடீஸ் திரைப்படம் வெளியேறியது
ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து இந்தியா சார்பில் பரிந்துரைக் கப்பட்டிருந்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் வெளியேறி உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுக்காக பல நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
இந்தியா சார்பில் பெண் இயக்குநர் கிரண் ராவ் உருவாக்கிய லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை ஒன்றிய பாஜக அரசு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கான 15 படங்களுக் கான இறுதி பட்டியலை ஆஸ்கர் குழு நிர் வாகிகள் வெளியிட்டனர். இதில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை.
இந்திய நடிகர்கள் நடித்து பிரிட் டனை சேர்ந்தவர்கள் தயாரித்த ‘சந்தோஷ்’ என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப் படங்களுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்திய நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் திரைப்படமாக இருந் தாலும் ‘சந்தோஷ்’ திரைப்படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருதுக்கான போட்டி யில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.