india

img

ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையம் பெயர் மாற்றம்!

ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பெயர்மாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஆறிவுறுத்தி உள்ளது. மேலும், பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.