india

img

0.001 சதவிகித அலட்சியத்தைக் கூட ஏற்க முடியாது

புதுதில்லி, ஜூன் 18 - நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவ காரத்தில் 2 வாரங்களில் பதிலளிக்கு மாறும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் தேசியத் தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்கும் நிலையில், தேர்வு நடைமுறைகளில், 0.001 சத விகித அலட்சியத்தைக் கூட ஏற்க முடி யாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள் ளனர்.

தேர்வில் மிகப்பெரிய அளவிற்கு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA)-க்கு எதிராக ஜூன் 1 அன்று சிவாங்கி மிஸ்ரா உட்பட 10 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  இதில், நீட் தேர்வை ரத்து செய்வது,  மறுதேர்வு நடத்துவது மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப் பெண்களை ரத்து செய்வது குறித்து  தொடரப்பட்டிருந்த மூன்று மனுக்கள், கடந்த ஜூன் 13 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்களை விசாரித்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் நரேஷ் கவுசிக், “கருணை மதிப் பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப் படும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என ஒரு சமரச ஏற்பாட்டைக் கூறி சமாளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என். பாட்டி அமர்வில் செவ்வாயன்று (ஜூன் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசியத் தேர்வுகள் முக மையும் ஒப்புக்கொள்ள வேண்டும். வழக்கு விசாரணையில், யாராவது தவறு இழைத்திருந்தால் அதை முழுமையாக ஆராய வேண்டும். 0.001  சதவிகிதம் அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும். மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவர், சமூகத்தில் என்ன மாதிரியான தீங்கை ஏற்படு த்துவார்? தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டும்” என்று நீதிபதிகள் தேசிய தேர்வு முகமைக்கு சுட்டிக்காட்டினர். மேலும், “மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, நீட் தேர்வுக்குத் தயார் ஆகின்றனர்? அவ்வாறிருக்க, தேர்வை  நடத்தும் ஒரு முகமையாக நீங்கள் (NTA) நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

தவறு நிகழ்ந்து இருந்தால், “ஆம் தவறு செய்யப்பட்டது; இந்த நடவடிக்கை எடுக்கப் போகிறோம்’’ என்று கூறுங்கள். குறைந்தபட்சம் அதுவாவது உங்களின் செயல்திறன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களிடம் இருந்து (என்டிஏ) உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்’’ என்றனர். தொடர்ந்து வினாத்தாள் கசிவு  உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;