தில்லியின் அலிப்பூர் பகுதியின் தயால்பூர் சந்தை அருகே உள்ள பெயிண்ட் தொழிற்சாலையின் ரசா யன கிடங்கில் வியாழனன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிழம்புகளுடன் ரசாயனம் வெடிக்க ஆரம்பித்ததால் தீயை உடனடியாக அணைக்க முடிய வில்லை. 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், வியாழனன்று நள்ளிரவு நிலவரப்படி 4 தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட தாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், வெள்ளியன்று காலை நிலவரப்படி அலிப்பூர் தீ விபத்தில் 11-பேர் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தகவல் தெரிவித்தார்.