india

img

Oyo நிறுவனத்திலிருந்து 300 ஊழியர்கள் பணிநீக்கம்!

OYO நிறுவனம் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பல துறைகளும் சரிவடைந்ததால், வர்த்தக நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை அடைந்தது. இதனால், வர்த்தக நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதற்கான எவ்வித மாற்று ஏற்படுகளையும் அரசு செய்யாமல் மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத திட்டங்களுக்கு செலவழித்து வருகின்றது.
இந்நிலையில், OYO என்ற ஹோட்டல் நிறுவனம் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிறுவனத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை, சில குறிப்பிட்ட வர்த்தக வடிவத்தில் அடிப்படை மாற்றங்களைச் செய்து வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் , கூட்டணிகளுக்கும் சிறப்பான சேவை அளிக்கும் பணியைத் தொடர முடியும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக OYO நிறுவனத்தின் வருவாய் அதிகளவிலான நஷ்டத்தை அடைந்து வரும் நிலையில் உள்ளது. ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு இதுவும் கூடுதல் காரணமாக இருக்கக்கூடும்.

;