india

img

கடந்த 10 ஆண்டுகளில் 1,562 சட்டங்கள் ரத்து!

கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா கடந்த ஜூலை 27-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம்,  நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கங்கள்) சட்டம் (Land Acquisition (Mines) Act), 1885 மற்றும் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடைமை) சட்டம் (Telegraph Wires (Unlawful Possession) Act), 1950 போன்ற சட்டங்களும், அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. 
கடந்த 2014-ஆம் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1,486 சட்டங்களை ரத்து செய்துள்ளது. இந்த 76 சட்டங்களையும் சேர்த்து கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.