india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நெரிச லில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் போலிச் சாமியாரின் உதவியாளரான தேவ் பிரகாஷ் மதுகர் தில்லியில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்துக்குள் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடி பாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

“ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கலந்தாய்வு ஒத்தி வைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

விடுமுறை காலகட்டத்தில் திருப்பதி ஏழு மலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கமானது என்ற நிலையில், சனி யன்று அளவுக்கதிகமான அளவில் கூட்டம் குவிந்த தால் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெள்ளியன்று 65,775 பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த பத்து ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு உள்பட பல்வேறு சர்வதேச சவால் கள் இருந்த போதிலும், இந்தியா ஒரு பிரகாச மான நட்சத்திரமாக மின்னி வருகிறது” என குடி யரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரி வித்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி - புர்வாஞ் சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 38 பேர் படுகாயம் அடைந்த னர். இதில் 17 பேர் நிலைமை சற்று கவலைக்கிட மான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக் கையுடன் மருத்துவ அறிக்கை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி
ரூ.1 லட்சம் கோடி வேண்டும்
மோடி அரசுக்கு
சந்திரபாபு நெருக்கடி

18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மோடி மீண்டும் பிரதமர் இருக்கையில் அமர்ந்துள்ளார். இதில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் அதிக இடங்களு டன் (28) மோடியின் பிரதமர் இருக்கையை தாங்கி வருகின்றனர். இரண்டு கட்சிக ளும் பாஜகவிற்கான ஆதரவை வாபஸ் பெற்றால் மோடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூறுவதை கட்டாயம் கேட்க வேண்டும் என்ற சூழல் பாஜகவிற்கு உருவாகியுள்ளது. 

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண் டும் என அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு மோடி அரசிற்கு எதிரான நெருக்கடி ஆட்டத்தை துவங்கியுள்ளார். ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவி யேற்ற பின் முதன் முறையாக தில்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜ்நாத் சிங், 6 ஒன்றிய அமைச்சர்கள், 16ஆவது நிதி குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா  ஆகியோரை சந்தித்து பேசினார். 

இந்த பேச்சுவார்த்தையில்,”ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும். மாநி லத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பை உயர்த்தி புதிய கட்டுமானத்திற்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மூலதனம் வழங்க வேண்டும்” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி என்பது சாதாரண தொகை அல்ல என்பதால், இதனை மோடி அரசு வழங்குமா? இல்லை வழக் கம் போல பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளிடையே மோதல் வெடிக்குமா? என்பது இனிமேல் தெரியவரும்.