india

img

கொரோனா தொற்றை எதிர்த்து போராட யோகா பயிற்சி உதவும்.... மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் சொல்கிறார்...

புதுதில்லி:
கொரோனா தொற்றை எதிர்த்து போராட பல நாடுகளில் யோகா பயிற்சிதான் உதவுகிறது என்று மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

லேசான கொரோனா தொற்றுக்கு ‘ஆயுஷ் 64’ என்ற மூலிகை மருந்தைசாப்பிடலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்தது. இந்நிலையில், இந்த ‘ஆயுஷ் 64’ மருந்தை விநியோகிப்பது தொடர்பான பிரச்சாரத்தைமத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத்நாயக் கோவா தலைநகர் பனாஜியில் வெள்ளியன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஸ்ரீபாத் நாயக், ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகாதினமாகக் கொண்டாடத் தொடங்கியது. யோகாவின் பயன்கள் குறித்து பலநாடுகளிடமும் விளக்கியது. இப்போது பல நாடுகளுக்கும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட யோகாதான் உதவுகிறது’ என்று கூறியுள்ளார்.யோகா-வை யாரெல்லாம் பயிற்சி செய்து வருகிறார்களோ அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவாகும். யோகா-வைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நுரையீரல், சுவாசக்குழாய் வலுவடைகிறது’ என்று தெரிவித்துள்ள ஸ்ரீபாத் நாயக், ‘இந்தியாவின் பழமையான யோகா பயிற்சியை உலகநாடுகளிடையே கொண்டு சென்றதன்மூலம் பிரதமர் மோடி தொலைநோக்குப்பார்வைகொண்ட தலைவராக விளங்குகிறார்’ என்றும் புகழ்ந்துள்ளார்.

;